/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு இடிந்து பாதித்தவர்களுக்கு நிவாரணதொகை வழங்கல்
/
வீடு இடிந்து பாதித்தவர்களுக்கு நிவாரணதொகை வழங்கல்
ADDED : டிச 06, 2024 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலால் வீடுகள் சேதமடைந்து பாதித்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலின் போது பெய்த கன மழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி, கெடார், பட்டிவளவு, கொடமாத்தி, தொரடிபட்டு, கொட்டப்புத்துார், ஆரம்பூண்டி, வாரம், சேராப்பட்டு உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் 59 வீடுகள் இடிந்து சேதமானது.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் 4,000 ரூபாய் வீதம் நிவாரண உதவித் தொகையை கல்வராயன் மலை தாசில்தார் கோவிந்தராஜ், துணை தாசில்தார் அந்தோணிராஜ் ஆகியோர் வழங்கினர்.