/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்
/
குறைகேட்பு கூட்டத்தில் நலத்தி்ட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 16, 2024 11:09 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை சார்ந்த நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை கோருதல், முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக 518 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊன்றுகோல், 3 பேருக்கு 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.