/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முஸ்லிம் மகளிர் சங்கத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
முஸ்லிம் மகளிர் சங்கத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
முஸ்லிம் மகளிர் சங்கத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
முஸ்லிம் மகளிர் சங்கத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 10:16 PM

கள்ளக்குறிச்சி::
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் சங்கத்தினர் 102 பேருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி முஸ்லிம் மகளிர் சங்கத்தினர் 102 பேருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்தல். தொழில் தொடங்குதல், தொழிலை விரிவாக்கம் செய்ய குறைந்த வட்டியில் தனிநபர் கடன், கைவினைக் கலைஞர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன், கல்விக் கடன், டாம்கோ கடன் உள்ளிட்ட கடன்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உரிய முறையில் விண்ணப்பித்து பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.