/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் வரும் 6ம் தேதி பொது ஏலம்
/
மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் வரும் 6ம் தேதி பொது ஏலம்
மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் வரும் 6ம் தேதி பொது ஏலம்
மதுவிலக்கு பறிமுதல் வாகனங்கள் வரும் 6ம் தேதி பொது ஏலம்
ADDED : ஜூன் 04, 2025 01:18 AM
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த 35 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன.
எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 5 நான்கு சக்கரம் மற்றும் 30 இரு சக்கரம் என மொத்தம் 35 வாகனங்கள் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டன. இவை மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகின்றன.
ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய்; நான்கு சக்கர வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்; என அன்றைய தினம் காலை 8.௦௦ மணிக்கு செலுத்த வேண்டும்.
இதை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், ஏலத்தில் கலந்து கொண்டு டோக்கன் பெறும் ஒவ்வொருவரிடமும் ஏலம் விடும் செலவிற்கு 100 ரூபாய் பெறப்படும். வாகனங்களை ஏலம் எடுத்துவுடன், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் முழு தொகையை செலுத்தியதும் பெற்றுக் கொள்ளலாம்.
வாகன உரிமையாளர் ஏலத்திற்கு முந்தைய தேதியில் அல்லது ஏலத்தில் கலந்து கொள்ளும் சமயத்தில் வந்தால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களை ஏ.டி.எஸ்.பி., அலுவலகம் - 9042417209, 04151-220260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.