/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
ADDED : மார் 11, 2024 05:21 AM

ரிஷிவந்தியம், : நுாரோலை கிராம எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராம எல்லையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பையும் மீறி கடந்த 2023ம் ஆண்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதனால், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் சாலையோரமாக மது அருந்துவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12:00 மணியளவில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கடை முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார், ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, 12:45 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

