/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜன 24, 2025 06:32 AM

ரிஷிவந்தியம்: அவிரியூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணாபுரம் அடுத்த அவிரியூர் காலனி பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் முருகன் கோவில் தெரு, மெயின் ரோடு உட்பட 7 தெருக்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மினிடேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள மின்மோட்டார் பழுதானதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் 7 தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பழுதடைந்த மின்மோட்டார்களை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் பல முறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் தியாகதுருகம் - பகண்டைகூட்ரோடு சாலையில் நேற்று காலை 6.45 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் திருமலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மின்மோட்டார் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் நேற்று காலை 7.15 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

