/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 23, 2025 05:57 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூரில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது.
தற்போது அருகில் உள்ள, 3,000 லிட்டர் நீர் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறையால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், போதிய குடிநீர் வழங்கக்கோரி, நேற்று காலை 8:30 மணிக்கு, மூங்கில்துறைப்பட்டு திருவரங்கம் சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார்பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமதானம் செய்து, 9:00 மணிக்கு மறியலை கைவிடச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.