/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூங்கில்துறைப்பட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
/
மூங்கில்துறைப்பட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
மூங்கில்துறைப்பட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
மூங்கில்துறைப்பட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED : அக் 19, 2024 04:27 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், காவல் நிலையம், தனியார் தொழிற்சாலைகள், தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள், கோவில்கள், நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் பெருகி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. மூங்கில்துறைப்பட்டைச் சுற்றிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அன்றாட தேவைக்கு மூங்கில்துறைப்பட்டுக்கு வரவேண்டும்.
மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங் களை இணைக்கும் எல்லை பகுதியாக உள்ளது.
மேலும் மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் இருந்து கிழக்கே 15க்கும் மேற்பட்ட கிராமங்களும் தெற்கே 15க்கும் மேற்பட்ட உட் கிராமங்களும், மேற்கே 10க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன.
எனவே, வளர்ந்து வரும் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

