/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 06:19 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த அரியாந்தக்கா காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு தெற்கு தெரு, டேங்க் தெரு மற்றும் வடக்கு தெருவில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக, 100 மீ., தொலைவில் உள்ள மூப்பனார் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து அங்குள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் மூன்று தெருக்களிலும் இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதால் தெருக்களில் விளையாடும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தெருக்களில் மின்கம்பங்கள் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, அரை மணி நேரத்திற்கு பிறகு தாமாக கலைந்து சென்றனர்.

