ADDED : நவ 10, 2025 04:10 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம் நடந்தது.
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் முத்தையன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் சின்னதுரை, வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். வட்ட பொறியாளர் அய்யனார் வரவேற்றார்.
முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட 22 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
