ADDED : மார் 16, 2026 03:37 AM

அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவு பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைகேட்பு முகாம் நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிறைமதி, இளைநிலை வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ரேஷன்கார்டில் புதிதாக உறுப்பினர் சேர்த்தல், பிறந்த தேதி திருத்தம், குடும்ப உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண் மற்றும் புகைப்படம் மாற்றம், முகவரி திருத்தம், குடும்ப தலைவர் மாற்றம் தொடர்பாக 24 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
