ADDED : செப் 19, 2026 03:51 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் பிரிவு அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் சிலம்பரசன் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கவுசல்யா, தனி வருவாய் ஆய்வாளர் மணிவேல் முன்னிலை வகித்தனர்.
முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், புகைப்படம் மாற்றம், மொபைல் எண் இணைத்தல் தொடர்பாக 31 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
அதேபோல், வாணாபுரத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். முகாமில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 10 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இளநிலை வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
