ADDED : ஜூன் 15, 2025 10:32 PM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்; வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கங்காலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், புதிதாக உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், நகல் அட்டை தொடர்பாக 54 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
கூட்டத்தில், இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
