UPDATED : ஆக 06, 2026 04:50 PM
ADDED : ஆக 06, 2026 04:21 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம் ஆகஸ்ட் 7 ல் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம், கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் 7ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். இதேபோன்று, வாணாபுரம் தாலுகா அலுவலகத்திலும் குறைகேட்பு முகாம் நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
