/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
/
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜன 20, 2026 06:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 223 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப் பட்டா கோருதல், நிலம் அளவீடு, சாலை அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, தெருமின்விளக்கு அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கோருதல் என பல்வேறு துறை சார்ந்த 223 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

