/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நலத்திட்ட உதவி
/
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நலத்திட்ட உதவி
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நலத்திட்ட உதவி
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்; கலெக்டர் நலத்திட்ட உதவி
ADDED : பிப் 10, 2025 10:50 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை, கடனுதவி, குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, வேலை வாய்ப்பு, வேளாண், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு 43 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி, மடக்கு சக்கர நாற்காலி வழங்கினார்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு துறையில் சிறப்பாக பணிபுரியும் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மிசன் வத்சால்யா திட்டத்தின் கீழ் 125 குழந்தைகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் 6 மாதங்களுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான நிதி ஆதரவு உதவித் தொகை வழங்கினார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) குப்புசாமி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.