/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்
/
பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : பிப் 13, 2024 06:13 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 519 மனுக்கள் பெறப்பட்டது
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதில் முதியோர் உதவி தொகை, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் துார்வாருதல் என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 519 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக 3 மாற்றுத் திறனாளிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தும் ஒளிரும் மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி, பிரெய்லி கைக்கடிகாரம். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிவிலியாங்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ், 23; என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.