/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் ரேசில் இளைஞர்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
/
பைக் ரேசில் இளைஞர்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஜூலை 15, 2025 07:28 AM
மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடத்தும் இளைஞர்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்கள் விலை உயர்ந்த பைக்குகளை வைத்துள்ளனர். தற்போது மூங்கில்துறைப்பட்டில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இன்றி உள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் இரவு நேரங்களில் பைக் ரேஸ் செல்கின்றனர். இவர்கள் சாலையில் வரும் வேகத்தைப் பார்த்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பைக் செல்லும் போது பொதுமக்கள் துாக்கத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
காவல்துறை சார்பில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இப்பகுதி இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் உயிரை பணயம் வைத்து பைக் ரேசில் ஈடுபடுகின்றனர். போலீசார் அதிரடி சோதனை நடத்தி பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

