தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் மறியல்

 குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் மறியல்

 குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் மறியல்


ADDED : ஜன 30, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னசேலம்: லட்சியம் கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலம் அடுத்த லட்சியம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள மின் மாற்றி பழுதானதால் கடந்த 3 தினங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

குடிநீர் வழங்க பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் கண்டு கொள்ளாததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 10:00 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்ற சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து 11:00 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us