ADDED : அக் 22, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுார் 2வது வார்டில் உள்ள தெருக்களில் மழைநீர் வெளியேற வசதி செய்து தர கோரிக்கை விடுத்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று இடைவிடாமல் பெய்த மழையில் தெரு முழுக்க மழைநீர் தேங்கி நின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மழை நீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் தேவகி மனோகர், மழைநீர் வெளியேற வழி செய்து தருவதாக கூறியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.