/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன் மலையில் மக்கள் தொடர்பு முகாம்
/
கல்வராயன் மலையில் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : பிப் 12, 2025 11:50 PM

கச்சிராயபாளையம்; கல்வராயன் மலையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நேற்று நடந்தது.
கல்வராயன்மலையில் உள்ள தொரடிப்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இலவச மனை பட்டா, சாதிச்சான்று, புதிய குடும்ப அட்டை, வனஉரிமைச் சான்று, சமூக பாதுகாப்புத் திட்ட நலத்திட்டங்கள், தாட்கோ, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் 482 பயனாளிகளுக்கு ரூ 44.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வாங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, ஆர்.டி.ஓ., லூர்துசாமி, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, தனி துணை ஆட்சியர் குப்புசாமி, ஒன்றிய துணை சேர்மன் பாட்ஷாபீ ஜாகிர் உசேன், தாசில்தார் சோமசுந்தரம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.