குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை
குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை
ADDED : செப் 19, 2026 03:21 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் பேருராட்சியில் குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சங்கராபுரம் பேரூரராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு வகை கழிவு என 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.
அக்டோபர் 1ம் தேதி முதல் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரிக்கப்படமாட்டாது. இதற்கான 4 வகையான குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி பேரூராட்சியில் துாய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
