/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியின்றி பொதுமக்கள் அவதி
ADDED : ஏப் 15, 2025 09:03 PM
கள்ளக்குறிச்சி; சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, போதிய பஸ் வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள் தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களில் சென்று ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு வருகின்றனர். வசதியற்றவர்கள் நடந்தே வருகின்றனர்.
நேரடியாக பஸ் வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உள்நோயாளிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் மருத்துவமனைக்கு வரும் கூட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படும்.
விழுப்புரத்தில் நகரில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடிய பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதேபோன்று கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அரசு மினி பஸ்கள் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.