/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2025 06:32 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இணை செயலாளர் ராஜராஜ சோழன் தலைமை தாங்கினார்.
இதில் தேர்தல் வாக்குறுதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், இறந்த மக்கள் நல பணியாளர்கள் குடும்ப நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், இறந்த மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுக்கு வேலை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கல்வித்தகுதி அடிப்படையில் பணி உயர்வு முன்பு வழங்கியது போல் மீண்டும் வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் நிர்வாகிகள் கருணாநிதி, இதயத்துல்லா, பெருமாள், முனியன், பிரபாகரன், மணிகண்டன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

