/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு பெண்ணையாற்றில் வௌ்ள அபாயம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

ADDED : அக் 26, 2024 08:22 AM
திருக்கோவிலுார் : சாத்தனுார் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு ஆதாரமான சாத்தனுார் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடி (7,321 மில்லியன் கன அடி) நீர் கொள்ளவைக் கொண்டது.
வடகிழக்கு பருவமழை காலமான நவம்பர் 30ம் தேதி வரை 117 அடி (6,875 மில்லியன் கன அடி) நீர் மட்டுமே தேக்கி வைக்க முடியும். தற்போதைய நிலவரப்படி 114 அடிக்கு மேல் எட்டியுள்ளது.
இந்நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நேற்று மதியம் 12:00 மணி நிலவரப்படி அணைக்கு 8,150 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், மதியம் 1:00 மணி அளவில் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர், நீர்மின் நிலையம் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை வெளியேற்றப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.