/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புரட்டாசி மாதம் எதிரொலி தியாகதுருகம் வார சந்தை 'டல்'
/
புரட்டாசி மாதம் எதிரொலி தியாகதுருகம் வார சந்தை 'டல்'
புரட்டாசி மாதம் எதிரொலி தியாகதுருகம் வார சந்தை 'டல்'
புரட்டாசி மாதம் எதிரொலி தியாகதுருகம் வார சந்தை 'டல்'
ADDED : செப் 29, 2024 06:35 AM
தியாகதுருகம்: புரட்டாசி மாதம் என்பதால் தியாகதுருகம் வார சந்தையில் கால்நடை விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது.
தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும்.இங்கு, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி கால்நடை சந்தை மிகவும் பிரபலம். சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளை இங்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
சரிசரியாக வாரம் தோறும் 500 ஆடுகள் 700 மாடுகள் விற்பனை செய்யப்படும். சீசன் நேரங்களில் இதன் விற்பனை ஆயிரத்தை தொடும்.
வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் இங்கு கால்நடைகள் வாங்க வருவதால் போட்டி போட்டு கூடுதல் விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் வார சந்தை நடக்கும் பகுதி களை கட்டுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் இறைச்சி சாப்பிடுவதில்லை.
இதன் காரணமாக நேற்று நடந்த வார சந்தையில் கால்நடை விற்பனை படு மந்தமாக இருந்தது.
ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வர விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் கிராக்கி இல்லாததால் வியாபாரிகளும் அதிகம் வரவில்லை. இதனால் 100க்கும் குறைவான ஆடு, மாடுகள் மட்டுமே நேற்று விற்பனைக்கு வந்தது.
அவைகளுக்கும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.புரட்டாசி மாதம் எதிரொலி காரணமாக நேற்று தியாகதுருகம் வாரச்சந்தை 'டல்' அடித்தது.