/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்
ADDED : செப் 28, 2025 03:48 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று காலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருளினர். துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார்.
இதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பெருமாள், தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.