/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 15 க்கு கொள்முதல்; ரூ. 50க்கு விற்பனை சங்கராபுரத்தில் ஹான்ஸ், குட்கா விற்பனை ஜோர்

ADDED : ஜூலை 07, 2025 02:26 AM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா விற்பனை ஜோராக நடப்பதால், பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சங்கராபுரம், தேவபாண்டலம், எஸ்.வி.பாளையம், விரியூர், குளத்துார், அரசம்பட்டு, பாலப்பட்டு, வளையாம்பட்டு, கடுவனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது.
பெங்களூரூவில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலை பொருட்கள், ஒரு பாக்கெட் ரூ.15 என்ற விலைக்கு வாங்கி, அதனை பெட்டி கடைகளில் ரூ. 50க்கு விற்பனை செய்கின்றனர். சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பெரும்பாலும் விவசாயிகள் உள்ளனர். எழுத்தறிவும் குறைவு. இதனால் தங்கள் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என விவசாயிகள் இரவு பகல் பராமல் உழைத்து வருகின்றனர்.
ஆனால், பள்ளி கல்லுாரியில் பயிலும் மாணவர்கள், குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்குகின்றனர்.
இது பெற்றோர் மத்தியில் கடும் மன உலைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
குறைந்த விலைக்கு புகையிலை பொருட்களை வாங்கி வந்து அதிக லாபம் கிடைப்பதால், இத்தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதனை போலீசாரும், சுகாதாரத்துறையும் கண்டுகொள்வதில்லை. உயர் அதிகாரிகள் இது குறித்து கேள்வி எழுப்பும்போது, பெயரளவிற்கு ஒன்றிரண்டு வழக்கு பதிவு செய்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குட்கா, பான்மசலா விற்பனையை தடுக்க வேண்டும்