/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : டிச 27, 2024 11:13 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுக்கும் பொருட்டு 6வது சுற்று தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரும் ஜன., 3 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. முகாமில் 4 மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுகள் மற்றும் சினை மாடுகளுக்கு(நிறைமாத சினைமாடுகளை தவிர) தடுப்பூசி போடப்படும்.
மாவட்டத்தில் 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் குளிர் பதன நிலையில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மருந்து எடுத்து செல்ல வேக்சின் கேரியர் அனைத்து மருந்தகங்களிலும் போதுமான அளவு உள்ளது. ஒரு நாளைக்கு 250 முதல் 300 கால்நடைகள் வீதம் 21 நாட்களில் தடுப்பூசி பணி முடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் 100 சதவீதம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திடும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பால் வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

