/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பலி
/
கார் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பலி
ADDED : டிச 31, 2024 04:50 AM
சின்னசேலம் : சின்னசேலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 55. ரயில்வே ஊழியரான இவர் நேற்று பிற்பகல் 2.00 மணி அளவில் பைக்கில், மேல் நாரியப்பனூரை சேர்ந்த கோமதுரை, 55; என்பவருடன் சென்றார்.
அம்மையகரம் அருகே சென்ற போது, பின்னால் சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய்சாய், 39; என்பவர் ஓட்டி வந்த கார் பெரியசாமி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயமடைந்து, சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.