/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில் நிலைய விரிவாக்கப் பணி
/
ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில் நிலைய விரிவாக்கப் பணி
ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில் நிலைய விரிவாக்கப் பணி
ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில் நிலைய விரிவாக்கப் பணி
ADDED : அக் 25, 2025 07:53 AM
சின்னசேலம்: சின்னசேலம் ரயில் நிலையம் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின்கீழ் விரிவாக்கம் செய்யும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.
அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தென்னக ரயில்வே, சேலம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசேலம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமர் மோடி கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி துவக்கி வைத்தார். ரயில் நிலையத்தில் புதிதாக பயணிகள் ஓய்வறை, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலைய முகப்பு, வணிக வளாகம், தானியங்கி படிக்கட்டுகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் விரிவாக்க பணிகள் துவங்கியது.
முகப்பு மற்றும் தானியங்கி படிக்கட்டுகளுக்கான முகாந்திர பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய உள்கட்டமைப்பு வசதிக்கான பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கிறது.
போதிய கழிவறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பிரதமர் துவக்கி வைத்த ரயில் மேம்பாட்டு திட்ட பணிகளை விரைவாக முடித்து, சின்னசேலம் ரயில் நிலையத்தை திறக்க தென்னக ரயில்வே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல்பெட்டி தேவை சேலம் - கடலுார் மார்க்மாக செல்லும் பயணிகள் ரயிலில் தினசரி பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். அதேபோல் தினசரி இருமுறை மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் சேவையை மேலும் ஒரு முறை கூடுதலாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

