/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அறுவடை தருணத்தில் மழை? விவசாயிகள் கவலை
/
அறுவடை தருணத்தில் மழை? விவசாயிகள் கவலை
ADDED : ஜன 19, 2025 06:37 AM
தியாகதுருகம்: அறுவடை தருணத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களின் அறுவடை பணி துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்ததை தொடர்ந்து அறுவடை பணிகளை தீவிரப் படுத்த விவசாயிகள் தயாராகி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்ப நேற்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக மழை பெய்யும் அறிகுறியோடு வானம் காணப்பட்டது.
பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் இத்தருணத்தில் மழை பெய்தால் அவை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விடுமோ என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகளுக்கு 'பெஞ்சல்' புயலால் கிடைத்த கனமழை ஆறுதலாக அமைந்தது.
தற்போது அறுவடையை குறித்த நேரத்தில் முடித்து விளைந்த பயிர்களை பாதுகாத்து விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.