/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடோன்களில் புகுந்த மழை வெள்ளம் ரூ.50 கோடி மதிப்பு தானியங்கள் சேதம்
/
குடோன்களில் புகுந்த மழை வெள்ளம் ரூ.50 கோடி மதிப்பு தானியங்கள் சேதம்
குடோன்களில் புகுந்த மழை வெள்ளம் ரூ.50 கோடி மதிப்பு தானியங்கள் சேதம்
குடோன்களில் புகுந்த மழை வெள்ளம் ரூ.50 கோடி மதிப்பு தானியங்கள் சேதம்
ADDED : டிச 04, 2024 07:54 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பகுதிகளில், வியாபாரிகள் குடோன்களில் இருப்பு வைத்திருந்த 50 கோடி ரூபாய்க்கும் மேலான விளைபொருட்கள் மழை வெள்ளத்தால் சேதமானது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் பகுதி, மாடர்ன் ரைஸ் மில், விவசாய விளைபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் குடோன்கள் நிறைந்த பகுதியாகும். மார்க்கெட் கமிட்டி இருப்பதால் விளைபொருட்களின் முக்கிய வர்த்தக பகுதியாக திகழ்கிறது.
கமிட்டியில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்த மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்களை 3 பெரிய குடோன்களில் இருப்பு வைத்திருந்தனர்.
மழை வெள்ளத்தால் இந்த 3 குடோன்களிலும் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக 20 கோடி ரூபாய் மதிப்பிலான தானியங்கள் முற்றிலுமாக மூழ்கி பாழானது. கம்பு உள்ளிட்ட சில மூட்டைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதுமட்டுமின்றி, 7க்கும் மேற்பட்ட மாடர்ன் ரைஸ் மில்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இங்கிருந்த ஆயிரக்கணக்கான நெல், அரிசி மூட்டைகள் நீரில் மூழ்கி வீணாகியதுடன், மின் மோட்டார், ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவற்றின் மொத்த சேத மதிப்பு 20 கோடியைத் தாண்டும் என கூறுகின்றனர்.
இதேபோன்று, சிறு வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட பொருட்களும் பாழானது. மொத்தத்தில் விளைபொருட்களின் சேத மதிப்பு மட்டும் ரூ. 50 கோடியைத் தாண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.