ADDED : ஜூலை 14, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால் முதியவர்கள், பெண்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. 20 நிமிடங்களுக்கு மேலாக பெய்த மழையால், வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.