கள்ளக்குறிச்சியில் மானாவாரி மக்காச்சோளம் சாகுபடி ஜோர்
கள்ளக்குறிச்சியில் மானாவாரி மக்காச்சோளம் சாகுபடி ஜோர்
ADDED : செப் 14, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் வறண்டு வருகிறது. இருப்பினும் விவசாய தொழிலையே முதன்மையாக செய்து வரும் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழை காரணமாக மானாவாரி நிலத்தில் பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால், சாகுபடி செய்த மக்காச்சோளப்பயிர் செழிப்பாக வளர்ந்து, நல்ல பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
