/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
/
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
ADDED : ஏப் 04, 2025 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கனமழையால், பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
சங்கராபுரம் சுற்றி உள்ள பாண்டலம், தியாகராஜபுரம், நெடுமானுர், சோழம்பட்டு, பொய்குனம், ஜவுளிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலையில், 2 மணி நேரம் வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
இதில் நெடுமானுர் கிராம காலனியை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி மாணிக்கம், சங்கீதா உள்ளிட்டோர் உட்பட பலரது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் வீட்டில் இருந்த நெல் முட்டைகள், துணிகள் உள்ளிட்டவைகள் மழைநீரில் நனைந்து சேதமாகின. வீட்டிற்குள் புகுந்த மழைநீரை சிரமப்பட்டு மக்கள் வெளியேற்றினர்.

