
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிறச்சியில் ராம நவமி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பெருமாள் கோவிலில் நேற்று ராம நவமி உற்சவம் நடந்தது. இதனையொட்டி, அதிகாலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜை நடந்தது.
மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
விஷ்ணு சகஸ்ரநாமம், ராமாஷ்டகம், ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் வாசிக்கப்பட்டன. ராம பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை செய்தனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ் பெருமாள் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, வேணுகோபால் சுவாமி, சேலம் மெயின் ரோடு ஆஞ்சநேயர், வரஞ்சரம் பெருமாள், தென்கீரனுார் கிருஷ்ணர், ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவில்களில் சிறப்பு உற்சவம் நடந்தது.
மேலும், சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், ராமர், சீதா, லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு, 11 வகையான பொருட்களால் அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன.
அதுமட்டுமின்றி, கல்யாண வரதராஜபேருமாள் மற்றும் பஸ்நிலைய ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.