தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரமலான் சிறப்பு தொழுகை

 ரமலான் சிறப்பு தொழுகை

 ரமலான் சிறப்பு தொழுகை


ADDED : மார் 21, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நேற்று காலை, ஈத்கா மைதானம், ஜிம்மா பள்ளி வாசல், நடுத்தக்கா, காட்டுபுரி தக்கா, ஈத்கா பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் தனித்தனியாக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப்பின் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆறத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருக்கோவிலுார்;: திருக்கோவிலுார் சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 9:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மௌலானா தலைமையில், இமாம் ஆஷிப் உள்ளிட்டவர்கள் சிறப்பு பிரசங்கம் செய்தனர். இமாம் ராஷித் தொழுகையை முன்நின்று நடத்தினார். சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்ற முஸ்லீம்கள் பூட்டை ரோடில் உள்ள ஈத்கா மைதானத்தில் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

சின்னசேலம்;: சின்னசேலம் அம்சாகுளம், பள்ளிக்கு அருகில் உள்ள மசூதி, விஜயபுரம், அண்ணா நகர் ஆகிய 4 மசூதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் சேலம் மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, மூங்கில்பாடி ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us