தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை ரேஷன் விநியோகம்
தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை ரேஷன் விநியோகம்
ADDED : ஜூன் 01, 2026 06:34 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த 29,555 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நாளை 2ம் தேதி மற்றும் நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
