தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


UPDATED : நவ 22, 2026 09:27 PM

ADDED : நவ 22, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 09:27 PM ADDED : நவ 22, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: எறையூரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்து, 23 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எறையூர் கிராமத்தில் ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் சரக டி.எஸ்.பி., நித்யா (பொ) அறிவுறுத்தலின் பேரில், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அகிலா, சப் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் எறையூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த மரியஜோசப், 42; என்பவர் தனது வீட்டிற்கு அருகே மாட்டு பண்ணை பயன்பாட்டிற்காக 1,150 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, மரிய ஜோசப்பை கைது செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 23 ரேஷன் அரிசி மூட்டைகளையும், டி.வி.எஸ்., மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us