/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் ரேஷன் கடை, நிழற்குடை; எம்.எல்.ஏ., திறப்பு
/
திருக்கோவிலுாரில் ரேஷன் கடை, நிழற்குடை; எம்.எல்.ஏ., திறப்பு
திருக்கோவிலுாரில் ரேஷன் கடை, நிழற்குடை; எம்.எல்.ஏ., திறப்பு
திருக்கோவிலுாரில் ரேஷன் கடை, நிழற்குடை; எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : அக் 01, 2025 12:54 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் ரேஷன் கடை மற்றும் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் தொகுதி மேம்பாட்டு நிதியில், வடிவேல் நகரில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. நகராட்சி ஆணையர் திவ்யா வரவேற்றார். சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, நகராட்சி சேர்மன் முருகன், நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் முன்னிலை வகித்தனர்.
பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து சந்தப்பேட்டை தாலுகா அலுவலகம் அருகே ஆசனுார் சாலையில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் துரைராஜன், சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.