ADDED : மார் 16, 2026 03:51 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த சுந்தரேசபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் வடக்குநெமிலியில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாவட்ட துணை சேர்மன் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் தீனதயாளன், சடகோபன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், திருக்கோவிலுார் நகர அவைத் தலைவர் குணா முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பாலமுருகன், ரஞ்சித், குமார், ஊராட்சி தலைவர்கள் செந்தில், செந்தில்குமார், பிரபு, ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
