/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆய்வு கூட்டம்
/
ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆய்வு கூட்டம்
ADDED : பிப் 02, 2025 05:09 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் விற்பனையாளர்களிடம், 'தினமும் காலை 9 மணிக்கு ரேஷன் கடையை திறந்து சுத்தமாக பராமரித்தல், எவ்வித புகாரும் இன்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், காலி சாக்கு பைகளை கட்டி வைத்தல், பணியின் போது அடையாள அட்டை அணிதல்' என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இதில் சார் பதிவாளர்கள் சக்திவேல், செல்வராசு, மணிகண்டன், முதுநிலை ஆய்வாளர் அருண்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.