/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள், பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்.
தரமற்ற பொருட்களுக்காக ரேஷன் கடை பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

