ADDED : செப் 23, 2026 07:42 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி சங்க பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு துறையையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களையும் அநாகரீகமாக பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமியை கைது செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
பெரும்பாலான கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாலும், கூட்டுறவு சங்கத்தில் பணம் எடுத்தல், நகை அடகு வைத்தல், அடகில் உள்ள நகையினை மீட்டல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்தனர்.
