/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செஞ்சிலுவைச் சங்க பொதுக்குழு கூட்டம்
/
செஞ்சிலுவைச் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 23, 2025 09:08 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க புதிய மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்டக் கிளைத் தலைவர் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் புதிய கிளையின் உறுப்பினர்களை அங்கீகரித்து வாழ்நாள் உறுப்பினர்களுக்கான சந்தா தொகை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு நிர்வாக குழு உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற 73 உறுப்பினர்களில் 20 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.