/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
/
துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 06:10 AM

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில், விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கிப் பேசினார்.
மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், டேனியல்ராஜ், ஜெயந்தி, மாலதி, குமரவேல், கோபி, மனோபாலன், ராஜேஸ்வரி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.