/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப கூட்டம்
/
வேளாண் விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப கூட்டம்
வேளாண் விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப கூட்டம்
வேளாண் விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப கூட்டம்
ADDED : செப் 11, 2025 10:55 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் ஆத்மா திட்டத்தின் மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனை மற்றும் வட்டார தொழில்நுட்ப கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆத்மா தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சங்கராபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
வேளாண் துறையின் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குநர் ஆனந்தன், தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் முருகன், வேளாண் மானிய திட்டங்கள், இயற்கை விவசாயம் குறித்து துணை வேளாண் அலுவலர் முருகேசன் விவரித்தனர்.
தொடர்ந்து ஆத்மா திட்ட பணிகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை, ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவி சுதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.