ADDED : டிச 05, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரகண்டநல்லூர் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை சமூக ஆர்வலர் டி.ஜி. கணேஷ் வழங்கினார்.
அரகண்டநல்லூர், பச்சையம்மன் கோவில் அருகே உள்ள புதுநகர் பகுதியில், மழையால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
பாதிக்கப்பட்ட 500க் கும் மேற்பட்டோருக்கு, திருக்கோவிலூர் சமூக ஆர்வலர் டி.ஜி. கணேஷ் புடவை, வேட்டி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதில் பேரூராட்சி சேர்மன் அன்பு, வழக்கறிஞர்கள் பாரதி, அமாவாசை மற்றும் ராஜேந்திரன், தமிழ் வேல், தமிழ்மணி, பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.