/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : பிப் 08, 2024 12:00 AM

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிழ்ச்சி நடந்தது.
தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதமானது.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, சேலை, வேட்டி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.
அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம்சுந்தர், நகர ஜெ., பேரவை செயலாளர் நம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மணி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதாப்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், நகர பொருளாளர் பாண்டு உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.